தஞ்சையில் தலையாட்டி பொம்மை மூலம் தேர்தல் விழிப்புணர்வு!

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் சோழன் சிலை அருகே முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (sveep) ன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை “மெய்யன் மெய்யாள்” என்னும் விழிப்புணர்வு பொம்மையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் இன்று (20.03.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் த.கா.ப அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ. தியாகராஜன் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. எம். கார்த்திக் ராஜா இ.ஆ.ப அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் செல்வி. நித்யா அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. க. கண்ணன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

error: Content is protected !!