திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள கைவல்ய நவநீத ஏகநாயகன் தியான மண்டபத்தில், பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் விழாவைத் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார். மடாதிபதி சுவாமி கோரக்ஷானந்தா முன்னிலை வகித்தார். சுவாமி தயானந்தா கல்லூரித் தமிழ் பேராசிரியர் டாக்டர் சுந்தர. சிவகுமார் அவர்கள் பக்தி ததும்பும் வகையில் முதல் சொற்பொழிவை நிகழ்த்தினார். சென்னை கைவல்ய நவநீத ஞான பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆன்மீகப் பயன் பெற்றனர். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அமாவாசை தோறும் இச்சொற்பொழிவுத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











